×

கொரோனா பரவல் அதிகரிப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.சீனாவில் 2019 ம் ஆண்டு தோன்றி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது. கொரோனாவின் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸான ஜேஎன்.1 வைரஸால் அதிக அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கான தென் கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில்,‘‘ ஜேஎன்.1 வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.வரையறுக்கப்பட்ட ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, ஜேஎன்.1 ல் ஏற்படும் கூடுதல் பொது சுகாதார ஆபத்து தற்போது உலக அளவில் குறைவாக மதிப்பிடப்படுகிறது.புதிய வைரஸ்களின் பரிணாமத்தை தென் கிழக்கு ஆசிய நாடுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக குளிர்காலம் நடக்கும் நாடுகளில், பிற வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்தொற்றுகளின் அதிகரிப்புகளுக்கு இடையே கொரோனா தொற்றின் அதிகரிப்பும் ஏற்படலாம்.பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் வீட்டிற்குள் நிறைய நேரம் ஒன்றாக சேர்ந்து இருப்பது மோசமான காற்றோட்டம் சுவாச நோய்களை ஏற்படுத்துவதோடு வைரஸ்கள் பரவுவதை எளிதாக்குகிறது. அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பைப் பெற வேண்டும்’’ என்றார்.

The post கொரோனா பரவல் அதிகரிப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : outbreak ,WHO ,New Delhi ,World Health Organization ,
× RELATED இதயம் காணும் இறைவன்